ஒலிம்பிக்: இறுதியாக இலக்கை கடந்த தருஷி 

இலங்கையின் தருஷி கருணாரத்ன பாரிஸ் ஒலிம்பிக்கில் மகளிருக்கான 800 மீற்றர் ஓட்டத்தில் ஆரம்ப சுற்றின் போட்டியொன்றில்(Heat 6) 8வது இடத்தைப் பெற்றுக் கொண்டார். 

நேற்று(02.08) நடைபெற்ற 800 மீற்றர் ஓட்டப் போட்டியை 2:07:26 நிமிடங்களில் தருஷி கருணாரத்ன நிறைவு செய்தார். இந்த போட்டியின் 1ம் இடத்தை ஜமைக்காவின் நாடோயா கோலே(Natoya Goule), 2ம் இடத்தை அவுஸ்ரேலியாவின் கிளாடியா ஹோலிங்ஸ்வொர்த்(Claudia Hollingsworth), 3ம் இடத்தை கென்யாவின் லிலியன் ஒடிரா (Lilian Odira) பெற்றுக்கொண்டனர். 

ஆரம்ப சுற்றின் ஒவ்வொரு போட்டியிலும் முதல் 3 இடங்களைப் பெற்றுக்கொள்ளும் வீரர்கள் அரையிறுதி சுற்றுக்கு நேரடியாக தெரிவு செய்யப்படுவர். 

இருப்பினும், Repechage எனும் முறைமைக்கு அமைய அரையிறுதி சுற்றுக்கு நேரடியாக தெரிவு செய்யப்படாத வீரர்களுக்கு மற்றுமொரு வாய்ப்பு வழங்கப்படும். 

அதற்கமைய தருஷி கருணாரத்ன பங்கேற்றும் Repechage சுற்று ஓட்டப் போட்டி இன்று(03.08) பிற்பகல் 2.40 மணியளவில் நடைபெறவுள்ளது. 

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றிருந்த கைல் அபேசிங்க ஆடவருக்கான 100 மீற்றர் பிரீஸ்டைல்(Freestyle) பிரிவின் ஆரம்பகட்ட போட்டியில்(Heat 4) இறுதி இடத்தை பெற்று வெளியேறியதுடன், கங்கா செனவிரத்ன மகளிருக்கான 100 மீற்றர் பேக் ஸ்ட்ரோக்(Backstroke) பிரிவின் முதல் சுற்று போட்டியொன்றில் முதலிடத்தை பெற்ற போதும், போட்டியை நிறைவு செய்வதற்கு அதிக நேரம் எடுத்தக்கொண்டதால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தார். 

இலங்கையின் இளம் பூப்பந்தாட்ட வீரர் வீரேன் நெட்டசிங்க பங்கேற்ற முதல் சுற்றில் இரண்டு போட்டியிலும் தோல்வியடைந்து வெளியேறினார்.

இலங்கை வீரர்களான அருண தர்ஷன பங்கேற்றும் ஆடவருக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியும், தில்ஹானி லேகம்கே பங்கேற்கும் மகளிருக்கான ஈட்டி எறிதல் போட்டியும் எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ளன. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version