மதுபான மற்றும் துப்பாக்கி உரிமங்களினுடாக மொட்டின் ஆதரவைப் பெற்ற ரணில்? 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான மதுபானம் மற்றும் துப்பாக்கி உரிமங்களை வழங்கியுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 1200 மதுபான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தயாசிறி ஜயசேகர சுட்டிக்காட்டியுள்ளார். 

மேலும், குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 300,000 ரூபா முதல் அனைத்து வகையான துப்பாக்கிகளையும் பயன்படுத்தும் சுதந்திரம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இவ்வாறான செயற்பாடுகளை மன்னிக்க முடியாது எனவும், இதனூடாகவே ரணில் விக்ரமசிங்க ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுள்ளதாகவும் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

மக்கள் போராட்டத்தின் போது சேதப்படுத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு தலா 30 மில்லியன் ரூபா தற்போதைய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளதாகவும் சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version