சுதந்திரக் கட்சியின் ஆதரவு சஜித்துக்கு – தீர்மானம் எட்டப்பட்டது

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளன.

கொழும்பில் இன்று (03.08) சனிக்கிழமை இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய, இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் எதிர்வரும் 07ஆம் திகதி கொழும்பில் கைச்சாத்திடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 31 ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்தது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவினால் இந்தத் தீர்மானம் அறிவிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.

தற்போது ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளன.

இதனிடையே, சுதந்திரக் கட்சியின் பலரது ஆதரவு உள்ளதாகவும் அவர்களை இணைத்துக்கொண்டு முன்னோக்கி செல்ல எதிர்பார்ப்பதாக விஜயதாச ராஜபக்சவை தேர்தலில் களமிறக்கும் தேசிய ஜனநாயக முன்னணி தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சுதந்திரக் கட்சியின் ஆதரவு யாருக்கு என்பது பெரும் குழப்பமாகவே காணப்படுகின்றது.

Social Share

Leave a Reply