இந்திய மீனவர்கள் 22 பேர் கைது

மன்னார் தீவை அண்மித்த கடற்பரப்பில் சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 22 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதன்போது 02 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த படகுகள் தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்திலிருந்து கடந்த மாதம் 21 மற்றும் 23 ஆம் திகதிகளில் புறப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கைக்கு நடுநிலை எல்லை வழியாக சர்வதேச கடற்பகுதி பகுதியில் சென்றபோது நேற்று (05.08) பிற்பகல் சீரற்ற வானிலை மற்றும் கடல் நீரோட்டங்கள் காரணமாக இலங்கை கடற்பகுதியில் சென்றதாக கூறப்படுகிறது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version