ஜூலை மாதத்திற்கான சிறந்த வீராங்கனைக்கான பட்டியலில் சமரி 

ஜூலை மாதத்திற்கான சிறந்த வீராங்கனைக்கான பட்டியலில் சமரி 

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித் தலைவி சமரி அத்தபத்து, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின்(ஐசிசி) ஜூலை மாதத்திற்கான சிறந்த வீராங்கனைக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். 

ஒவ்வொரு மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரரை தெரிவு செய்யும் நோக்கில், குறித்த மாதத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மூவரை ஐசிசி பரிந்துரை செய்யும். மூவரில் ஒருவர் ஐசிசி நியமிக்கப்பட்ட குழுவின் வாக்குகளுக்கமையவும், இரசிகர்களின் வாக்குகளுக்கமையவும் மாதத்தின் சிறந்த வீரராக தெரிவு செய்யப்படுவார். 

அதற்கமைய, மகளிர் ஆசிய கிண்ணத்தை இலங்கை அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணியாக இருந்த அணித் தலைவி சமரி அத்தபத்து சிறந்த வீராங்கனைக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். அவர் ஆசியக் கிண்ணத் தொடரில் 304 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். 

இந்தியா அணியின் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா ஆகியோரும் ஜூலை மாதத்திற்கான சிறந்த வீராங்கனைக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் ஆசிய கிண்ணத் தொடரில் இந்தியா அணிக்காக சிறப்பாக துடுப்பெடுத்தாடியிருந்தனர்.

ஐசிசி இணையத்தளத்தினுடாக உலகம் முழுவதிலும் உள்ள கிரிக்கெட் இரசிகர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ள மூவரில் ஒருவருக்கு வாக்களிக்க முடியும். அடுத்த வாரம் ஐசிசியினால் முடிவுகள் அறிவிக்கப்படும். 

இதற்கு முன்னரும், கடந்த மே மாதம் மற்றும் கடந்த வருடம் செப்டம்பர் மாதத்திலும் சமரி அத்தபத்து குறித்த மாதங்களுக்கான சிறந்த வீராங்கனையாக தெரிவு செய்யப்பட்டிருந்தார். 

Social Share

Leave a Reply