தொடரை தீர்மானிக்கும் இந்தியா, இலங்கை போட்டி ஆரம்பம்

தொடரை தீர்மானிக்கும் இந்தியா, இலங்கை போட்டி ஆரம்பம்

இலங்கை, இந்தியா அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேசப் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது.

முதற் போட்டி போட்டி இரு அணிகளுக்குமிடையில் சமநிலையில் நிறைவடைந்தது. இரண்டாவது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் இலங்கை அணி வெற்றி பெற்றால் தொடர் இலங்கை வசமாகும். இந்தியா அணி வென்றால் தொடர் சமநிலையில் நிறைவடையும். இந்த நிலையில் இன்றைய போட்டி விறு விறுப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. 1997 ஆம் ஆண்டின் பின்னர் இலங்கை அணி இந்தியா அணியுடன் தொடரை வென்றதில்லை.

அணி விபரம்

இலங்கை அணி சார்பாக அகில தனஞ்சய நீக்கப்பட்டு, மஹீஸ் தீக்ஷண அணிக்குள் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியா அணி சார்பாக லோகேஷ் ராகுல், அர்ஷீப் சிங் ஆகியோர் நீக்கப்பட்டு, ரிஷாப் பாண்ட், ரியான் பராக் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இலங்கை அணி: சரித் அசலங்க, பத்தும் நிஸ்ஸங்க, குஷல் மென்டிஸ், அவிஷ்க பெர்னாண்டோ, சதீர சமரவிக்ரம, ஜனித் லியனகே, டுனித் வெல்லாளஹே, மஹீஸ் தீக்ஷண, அசித்த பெர்னாண்டோ, கமிந்து மென்டிஸ்

இந்தியா அணி: ரோஹித் சர்மா, சுப்மான் கில், விராட் கோலி, சிரேயாஸ் ஐயர், ரிஷாப் பாண்ட், சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரியான் பராக், மொஹமட் சிராஜ்

SriLanka vs India ODI 03. Match day Live updates from R Premadasa ground. #slvsind
Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version