நாடாளுமன்ற உறுப்புறுரிமையை இழந்த ஹரின், மனுஷ

நாடாளுமன்ற உறுப்புறுரிமையை இழந்த ஹரின், மனுஷ

சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோரை
கட்சியிலிருந்து நீக்குவதற்கான ஐக்கிய மக்கள் சக்தியின் தீர்மானம் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் என உயர் நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.

உயர் நீதிமன்றத் தீர்ப்பின் விளைவாக, ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர்
நாடாளுமன்ற உறுப்புரிமையையும் அமைச்சுப் பதவிகளையும் இழக்க நேரிட்டுள்ளது.

விஜித் மலல்கொட, அச்சல வெங்கப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வில், மனுதாரர்கள் இருவரையும் கட்சியிலிருந்து நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானம் சட்டப்படி செல்லுபடியாகும் என தீர்ப்பளிக்கப்பட்டது.

சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தி தம்மை கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கியதை எதிர்த்து இரண்டு தனித்தனியான மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

Social Share

Leave a Reply