இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 35 இந்திய மீனவர்கள் புத்தளம், கற்பிட்டி வடக்கு குதிரை மலை கடற்பகுதியில் கடற்படையினரால் நேற்று(08.08) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
நான்கு படகுகளில் வருகை தந்த இந்திய மீனவர்களே இவ்வாறு இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது குறித்த நான்கு விசைப் படகுகளும், மீன்பிடிக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட 35 இந்திய மீனவர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பிரதேச கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.