கம்பஹாவில் 12 மணித்தியாலங்கள் நீர்வெட்டு 

கம்பஹாவில் 12 மணித்தியாலங்கள் நீர்வெட்டு 

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் எதிர்வரும் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

களனி, வத்தளை, பியகம ஆகிய பகுதிகளுக்கு எதிர்வரும் 11ம் திகதி காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை 12 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

பேலியகொடை நகர சபைக்குட்பட்ட பகுதிகள், ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவை பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகள் பியகம, மஹர, தொம்பே, கட்டான, மினுவங்கொடை  மற்றும் கம்பஹா பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபை அறிவித்துள்ளது. 

Social Share

Leave a Reply