மதுபானங்களின் விலையில் மாற்றம்? 

மதுபானங்களின் விலையில் மாற்றம்? 

எதிர்வரும் காலங்களில் மதுபானத்தின் விலையை குறைப்பதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.  

750 மில்லி லீட்டர் மதுபான போத்தல் ஒன்றின் விலை 900 – 1000 ரூபாவினாலும், 175 மில்லி லீட்டர் மதுபான போத்தல் ஒன்றின் விலை 200 ரூபாவினாலும் குறைக்கப்படவுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

அண்மையில் மதுவரித் திணைக்கள ஆணையாளருக்கும், மதுபான நிறுவனங்களுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது, மதுபான உற்பத்திக்கு அதிகம் பயன்படுத்தப்படும் உற்பத்தி பொருட்களின் விலை குறைந்துள்ளதால், மதுபானத்தின் விலையை குறைக்க வேண்டும் எனக் மதுவரி திணைக்கள ஆணையர் தெரிவித்துள்ளார்.

மதுபான போத்தல்களின் விலையில் 80% – 90% வட் மற்றும் பிற வரிகளை உள்ளடக்கியுள்ளதாக மதுபான நிறுவனங்கள் சுட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

Social Share

Leave a Reply