மலையக மக்களின் சாபம் அரசாங்கத்தை சும்மா விடாது – உதயகுமார் சூளுரை

மலையக மக்களின் சாபம் அரசாங்கத்தை சும்மா விடாது - உதயகுமார் சூளுரை

ஏமாற்றுக்காரர்களின் கூடாரமாக அரசாங்கம் மாறியுள்ளதாகவும் அந்த கூடாரத்தின் தலைவராக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி செயற்பட்டு வருவதாகவும் தொழிலாளர் தேசிய முன்னணியின் பிரதித் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான உதயகுமார் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரித்து பிரச்சாரம் முன்னெடுப்பது தொடர்பில் தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் முக்கியஸ்தர்களை தெளிவுபடுத்தும் கூட்டம் ஹட்டனில் இன்று (11.08) நடைபெற்றது.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் , தொழில் அமைச்சரும் இணைந்து பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளம் வழங்குவதாக பொய் வாக்குறுதியளித்தார்கள்.

நாட்டு மக்களை ஏமாற்றியதாலே தொழில் அமைச்சர் தனது அமைச்சுப் பதவியை இழந்துள்ளார். கடவுளே அவருக்கு தண்டனை வழங்கி விட்டார்.

இந்த அரசாங்கத்தின் ஆயுட்காலம் சிறிது நாட்களே. இன்னும் 44 நாட்களில் இந்த அரசாங்கத்தின் ஆயுட்காலம் முடிந்து விடும். மலையக மக்கள் அவர்களுக்கு சரியான பாடத்தை கற்பித்து வீட்டுக்கு அனுப்புவார்கள்.

மலையக மக்களின் சாபத்தை பெற்று எவரும் ஆட்சியில் இருக்க முடியாது” என்றார்.

Social Share

Leave a Reply