ட்ரம்பை பின்தள்ளி முன்னிலை வகிக்கும் கமலாஹாரிஸ்

ட்ரம்பை பின்தள்ளி முன்னிலை வகிக்கும் கமலாஹாரிஸ்

அமெரிக்காவில் விஸ்கான்சின், பென்சில்வேனியா மற்றும் மிச்சிகன் ஆகிய மூன்று முக்கிய மாநிலங்களில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸ், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பை விட முன்னிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவில் நவம்பர் மாதம் 05 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரதான இரு வேட்பாளர்களான கமலா ஹாரிஸ் மற்றும் ட்ரம் தமது பிரச்சாரங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 05 மற்றும் 09ஆம் திகதிகளுக்கிடையில் நியூயோர்க் டைம்ஸ் மற்றும் சியனா கல்லூரி மேற்கொண்ட அண்மைய கருத்து கணிப்புகளின் படி, கமலா ஹாரிஸ் ட்ரம்பை விட நான்கு சதவீத புள்ளிகளில் முன்னிலை வகிக்கின்றமை தெரியவந்துள்ளது.

விஸ்கான்சின், பென்சில்வேனியா மற்றும் மிச்சிகன் ஆகிய மூன்று மாநிலங்களில் உள்ள 1,973 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 50% முதல் 46% வரை ஆதரவுடன் கமலா ஹாரிஸ் ட்ரம்பை நான்கு சதவீத புள்ளிகளில் முன்னிலை வகிப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version