எரிவாயு சிலிண்டர் தொடர்பாக 233 சம்பவங்கள் பதிவு

சமையல் எரிவாயு தொடர்பில் முறையான ஒழுங்குபடுத்தல்கள் இல்லை என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்று (29/11) இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், கடந்த 2015ஆம் ஆண்டு முதல் லிட்ரோ மற்றும் லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சம்பந்தப்பட்ட 233 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அந்தவகையில் இன்று வரை சமையல் எரிவாயு தொடர்பான முறையான ஒழுங்குபடுத்தல்கள் இல்லை என்றும், எனினும் அரசாங்கம் என்ற வகையில் சகலரும் அதற்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எரிவாயு சிலிண்டர் தொடர்பாக 233 சம்பவங்கள் பதிவு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version