இலங்கையை எதிர்க்கொள்ளவுள்ள பலமிக்க நியூசிலாந்து அணி  

இலங்கையை எதிர்க்கொள்ளவுள்ள பலமிக்க நியூசிலாந்து அணி  

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் சுற்றுப்பயணங்களுக்கான நியூசிலாந்து டெஸ்ட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய வீரர்களை உள்ளடக்கியவாறு அறிவிக்கப்பட்டுள்ள பலமிக்க நியூசிலாந்து குழாமில் 5 சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர். 

நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. 

பின்னர், இலங்கைக்கு வரவுள்ள நியூசிலாந்து அணி இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது. 

முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 18ம் திகதி காலியில் நடைபெறவுள்ள அதேவேளை, இரண்டாவது டெஸ்ட் போட்டி செப்டெம்பர் 26ம் திகதி அதே மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

நியூசிலாந்து குழாம்: டிம் சௌதி (அணித் தலைவர்), டாம் ப்ளண்டல், மைக்கேல் பிரேஸ்வெல், டெவோன் கான்வே, மேட் ஹென்றி, டாம் லாதம், டேரில் மிட்செல், வில் ஓ ரூர்க், அஜாஸ் படேல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், பென் சியர்ஸ், கேன் வில்லியம்சன், வில் யங்

Social Share

Leave a Reply