தேசிய சுதந்திர முன்னணியின் புத்தளம் மாவட்ட தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் பிரியந்த ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இன்று (13.08) சந்தித்து அவர் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த உயிரிழந்ததன் பின்னர் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு விருப்பு வாக்குப் பட்டியலில் அடுத்த இடத்தில் இருந்த ஜகத் பிரியந்த தேர்வு செய்யப்பட்டார்.