தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளம் – வெளியான வர்த்தமானி

தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளம் - வெளியான வர்த்தமானி

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,700 ரூபாவாக அதிகரித்து மற்றுமொரு வர்த்தமானி
அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

தொழில் ஆணையாளர் எம்.கே.கே.எஸ்.ஜயசுந்தரவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நாளாந்த அடிப்படை சம்பளமாக 1,350 ரூபாவும், உற்பத்தி அடிப்படையிலான ஊக்குவிப்பு கொடுப்பனவாக
350 ரூபாவுமாக 1,700 ரூபா வழங்கப்படவுள்ளன.

குறித்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் ஏதேனும் ஆட்சேபனைகள் காணப்படுமாயின்
அதற்கான காரணங்களுடன் எதிர்வரும் 28ஆம் திகதி மதியம் 12 மணிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,700 ரூபாவாக அதிகரித்து
முன்னதாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது.

இதன்பின்னர் குறித்த வர்த்தமானி அறிவித்தல் மீளப் பெறப்பட்டதுடன் சம்பள நிர்ணய சபையில் நேற்று (14.08)
முன்தினம் எட்டப்பட்ட தீர்மானத்துக்கமைய தற்போது புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version