
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் ஜனாதிபதி ரணில்
விக்ரமசிங்க சற்று முன்னர் கையொப்பமிட்டார்.
கையொப்பமிடும் நிகழ்வு கொழும்பு பிளவர் வீதியிலுள்ள அவரது அரசியல் அலுவலகத்தில் இன்று (14.08) இடம்பெற்றது.
சுயாதீன வேட்பாளராக போட்டியிடும் அவர் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதன் பின்னர் கடந்த மாதம் 26 ஆம் திகதி முதன் முதலாக கட்டுப்பணம் செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கடந்த திங்கட்கிழமை
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் கையொப்பமிட்டார்.
பெலவத்தையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணி அலுவலகத்தில் அவர் கையொப்பமிட்டார்.