இந்திய – இலங்கை பயணிகள் கப்பல் சேவை ஆரம்பமானது

இந்தியாவின் நாகபட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று முதல் மீள ஆரம்பமாகியுள்ளது.

இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை நாகபட்டினத்திலிருந்து இன்று (16.08) நண்பகல் 12 மணிக்கு 47 பயணிகளுடன் புறப்பட்ட நிலையில் மாலை 03 மணிக்கு காங்கேசன்துறையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாரத்தில் ஏழு நாட்களும் இந்த படகுச் சேவை இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையே பயணி ஒருவருக்கான கட்டணம் வரிகள் உட்பட 59 அமெரிக்க டொலர்கள் (5 000 இந்திய ரூபா ) என்றும், காங்கேசன்துறை-நாகப்பட்டினம் இடையே பயணச்சீட்டு கட்டணம் 55 அமெரிக்க டொலர்கள் (4,650 இந்திய ரூபா ) என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ரூபாவின் படி, நாகப்பட்டினம் – காங்கேசன்துறைக்கு ஒரு வழிக்கட்டணமாக 17,804 ரூபாவும் காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையேயான பயணச்சீட்டு கட்டணம்16,557 ரூபாவும் அறவிடப்படுகிறது.

நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை கடந்த மே மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமாகும் என கூறப்பட்ட போதிலும் சீரற்ற காலநிலை மற்றும் தொழினுட்ப கோளாறு காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீள ஆரம்பமாகியுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version