இலங்கையின் வரலாறு புதிதாக எழுதப்படுகின்ற இந்த சந்தர்ப்பத்தில் இந்த வேலைத்திட்டத்தின் சாட்சியாளர்களாக அல்லாமல் பங்காளர்களாக மாறி நாட்டின் வெற்றிப் பயணத்தில் பங்குதாரர்களாக இணைந்துகொள்வதோடு நாட்டை வலுவூட்டும் இந்தப் பயணத்தின் தலைவர்களாக மாறி செயற்படுமாறு
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
2024 ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியினதும் ஐக்கிய மக்கள் கூட்டணியினதும் வேட்பாளராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பங்கேற்ற வெற்றியின் முதல் பொதுக் கூட்டம் இன்று (16.08) குருநாகல் சத்தியவாதி மைதானத்தில் பெரும் சனத் திரளுக்கு மத்தியில் சிறப்பாக நடைபெற்றது.
இதன்போது உரையாற்றிய எதிர்கட்சித் தலைவர்,
நடைமுறை ரீதியாகவும் முற்போக்கு ரீதியாகவும் இந்தக் காலத்தில் மக்களுக்காக கருத்துக்களை முன்வைத்து போராட்டங்களை நடத்தியுள்ளதோடு, ஊழல் மோசடியை இல்லாது ஒழிக்கின்ற நோக்கில் பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். ஏனைய கட்சித் தலைவர்களை போன்று மேடைகளில் ஏறி நாடகங்களை அரங்கேற்றாது வெற்றுப் பைல்களை காண்பித்து மாக்களை ஏமாற்றுகின்ற நாடகங்களில் நடிக்காது, செயற்பட்டுள்ளோம். நாட்டை வங்கரோத்து நிலைக்கு கொண்டு சென்ற ராஜபக்ஸக்களை சட்டத்தின் முன் நிறுத்தி ராஜபக்ஸக்கள் நிதி மோசடியில் ஈடுபட்டமைக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளோம்.
திருடப்பட்ட நாட்டின் வளங்களையும் திருடப்பட்ட நாட்டின் பணத்தையும் மீளப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக தனிநபர் சட்டமூலத்தை ஐக்கிய மக்கள் சக்தியே முதல் முதலில் சமர்ப்பித்துள்ளது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமக்கோ அல்லது தமது கட்சி உறுப்பினர்களுக்கோ திருடர்களுடன் எந்தவொரு ஒப்பந்தமும் இல்லை. திருடர்களை பாதுகாக்கின்றவர்களோடும் எந்தவொரு ஒப்பந்தமும் இல்லை. கைவாறு அரசியலை நிறுத்துவதோடு இந்த அரசியல் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பேன்.
மதுபானசாலைகளுக்கான அனுமதிப்பத்திரம் மற்றும் வைன் ஸ்டோர்களுக்காக அனுமதிப்பத்திரங்களுக்காகவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் விலைபேசப்படுகின்ற யுகத்தை நிறைவு செய்வோம். ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ள ஒவ்வொருவரும் வரங்களையும் வரப்பிரசாதங்களையும் எதிர்பார்க்காது கொள்கையை அடிப்படையாகக் கொண்டே எம்மோடு இணைந்தனர். எமது கட்சியின் நிதி பிரபஞ்சம் மற்றும் மூச்சு ஆகிய வேலைத்திட்டங்களுக்காகவே ஒதுக்கப்படுகின்றன.
கட்சி மாறுகின்றவர்களுக்கும் கட்சி மாறுவதற்கும் இடமளிப்பதோடு செப்டெம்பர் 21 ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவது தொடர்கதைகளாகவே அன்றி மக்களின் வாக்குரிமை மூலமே தெரிவு செய்யப்பட்டு, பொதுமக்களின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவேதாடு ஐக்கிய மக்கள் சக்தி சொல்வதை செய்கின்ற செய்வதைச் சொல்கின்ற கட்சியாகவே செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.
கடந்த காலங்களில் இனவாதத்தையும் மதவாதத்தையும் குரோதத்தையும் வைராக்கியத்தையும் அடிப்படையாக வைத்து அரசியல் தலைவர்கள் உருவாகினார்கள். அந்த குரோதத்திற்கு மத்தியில் ஐக்கியத்திற்கான விதையை முளைக்கச் செய்து ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்டுள்ளது. பிரித்தாளுகின்ற இந்த புற்று நோய்க்குப் பதிலாக அன்பையும் கருணையையும் உணர்வுபூர்வமான தன்மையையும் வெளிப்படுத்துகின்ற அரச நிறுவாகத்தை உருவாக்கி காயப்பட்டுள்ள இந்நாட்டை சுகப்படுத்த தயார்.
குரோதத்தை வெளிப்படுத்துகின்றவர்களை மக்கள் வெறுப்பதோடு, இனவாதத்தையும் மதவாதத்தையும் ஒதுக்கி இலங்கைக்கேயான தன்மையுடன் கூடிய யுகத்தை உருவாக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி மக்ளோடு மாத்திரமே ஒப்பந்தம் செய்திருக்கின்றது.
நாட்டின் ஜனாதிபதிக்கு இலகுத்தன்மை காணப்பட்டாலும் ஜனாதிபதி உலக சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு உல்லாசங்களை அனுபவித்து வருவதோடு நாட்டின் ஜனாதிபதி என்பவர் நாட்டின் தற்காலிக பாதுகாவலரே அன்றி நாட்டின் சொந்தக்காரர் அல்லர் என்று இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
எனினும் நாட்டில் காணப்படுகின்ற பிரச்சினைகளை இனவாத மற்றும் சோசலிச சிந்தனையுள்ளவர்களால் தீர்க்க முடியாது. ஊழலையும் மோசடியையும் இல்லாது செய்து திருடப்பட்டுள்ள நாட்டின் சொத்துக்களை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கு தேவையான சக்தியை பெற்றுத் தாருங்கள். மருந்துப் பொருள் ஊழல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அதற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தி தான் கொண்டு வந்தது. அந்த மருந்து ஊழலில் ஈடுபட்டவர்களிடமே நாட்டை மீண்டும் கையளிக்காமல் சரியான தீர்க்கமான முடிவை எடுக்கமாறு எதிர்க்கட்சித் தலைவர் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.