அலி சாஹிர் மௌலானாவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை  

அலி சாஹிர் மௌலானாவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை  

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானாவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

இதற்கான கடிதம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளரினால் பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்திருந்தது. இருப்பினும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தார். 

இந்நிலையில், கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக செயற்பட்டமையினால் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. 

Social Share

Leave a Reply