
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 34,906 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த எண்ணிக்கை 14,248 காணப்படுகின்றது.
கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 8,452 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்தில் 16 பேர் டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.