அர்ஜுன மகேந்திரனை மீள அழைத்து வருவதாக அனுர உறுதி   

அர்ஜுன மகேந்திரனை மீள அழைத்து வருவதாக அனுர உறுதி   

தாம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால், மத்திய வங்கி மோசடி தொடர்பில் நீதிமன்றத்தால் தேடப்பட்டு வரும் அர்ஜுன மகேந்திரனை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

கிரிபத்கொட பிரதேசத்தில் நேற்று(18.08) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இதேவேளை, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் இலங்கையில் எரிபொருள் விலை குறைக்கப்படும் எனவும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியுடன் 3 பில்லியன் டொலர் கடனைக் கொண்டிருந்ததாகவும், அதனை திறைசேரி பொறுப்பேற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ள அனுரகுமார திஸாநாயக்க, இதன் விளைவாக குறித்த கடனை அடைப்பதற்கு ஒரு லிட்டர் எரிபொருளுக்கு மேலதிகமாக 50 ரூபாய் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

இருப்பினும் குறித்த கடன் முழுமையாக மீள செலுத்தப்பட்டு நிறைவடையும் நிலைக்கு வந்துள்ள போதும், லிட்டருக்கு 50 ரூபாய் மேலதிகமாக அறவிடப்படுவது பொதுமக்களுக்கு தொடர்ந்தும் சுமையாக இருந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் இந்த விடயம் தொடர்பில் முழுமையான ஆய்வு நடத்தப்பட்டு எரிபொருள் விலை குறைக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார். 

Social Share

Leave a Reply