பூண்டுலோயா – நியங்கந்தர பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று (29/11) மாலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து அங்கு விரைந்த பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அதன்போது பின்புறத்தில் உள்ள மலசலகூடத்திலிருந்து சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 23 வயது இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
