மின்சார வாகனங்களுக்கு முன்னுரிமை

பெற்றோல் வாகனங்களில் இருந்து அதிக அளவு கரியமில வாயு வெளியேற்றம் மற்றும் நகர்ப்புறங்களில் தற்போது நிலவும் வளி மாசு காரணமாக எதிர்காலத்தில் வாகனங்களை இறக்குமதி செய்யும் போது மின்சார வாகனங்களை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

தேசிய சுற்றாடல் பேரவையின் பதினான்காவது அமர்வில் நேற்று (29/11) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “நமது நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் எரிபொருளில் 71% மோட்டார் வாகனங்களுக்காகப் பயன்படுத்தப்படுவதாக அமைச்சு தெரிவித்தது.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கரியமில வாயு நீண்ட நேரம் ஒரே இடத்தில் நிறுத்தி இருக்கும் வாகனங்களிலிருந்து வெளியேறுகிறது. ஆனால் வேகமாக மற்றும் நகரும் வாகனங்களிலிருந்து அது வெளியேறாது.

அத்துடன் கொழும்பில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள நேரங்களில் மணிக்கு 6 கி.மீ வேகத்தில் பயணிக்கும் வகையில் வேக எல்லை குறைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது” என்றும் அமைச்சர் தெரிவித்தார் .

மின்சார வாகனங்களுக்கு முன்னுரிமை

Social Share

Leave a Reply