கனடாவில் மக்கள் குடியிருப்பு பகுதி ஒன்றில் எரிவாயு வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இதனால் அப்பகுதியில் வாயு சூழ்ந்த நிலையில் புகை மண்டலமாக காட்சியளித்ததாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் தமது அன்றாட வாழ்க்கை பாதித்துள்ளதாக தெரிவித்த கனடாவாசிகள் எரிவாயு மணத்தின் நெடி வீசுவதனால் தாம் பல்வேறு அசெளகரியங்களுக்கு உள்ளாகி வருவதாகவும் சுட்டிக்காட்டினர்.
நிலக்கீழ் பொறிமுறையின் மூலம் எரிவாயு விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், திடீரென ஏற்பட்ட எரிவாயு கசிவின் காரணமாக வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
