யானையை அழித்த ரணில் – விஜயதாச ராஜபக்‌ஷ

யானையை அழித்த ரணில் - விஜயதாச ராஜபக்‌ஷ

இலங்கைக்கு சுதந்திரத்தை தேடிக் கொடுத்த ஐக்கிய தேசிய கட்சி, ரணில் விக்ரமசிங்கவினுடைய தலைமையில் இல்லாதொழிக்க பட்டுள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். 

சில வருடங்களுக்கு முன்னர் ரணில் விக்ரமசிங்க தன்னை அமைச்சரவையிலிருந்து நீக்கிய காலத்திலேயே இந்த விடயத்தை தெரிவித்ததாக, ஹம்பாந்தோட்டையில் நேற்று(19.08) நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போது விஜயதாச ராஜபக்‌ஷ சுட்டிக்காட்டியுள்ளார். 

இந்த விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,  

“நான் எதிர்வு கூறி 2 வருடங்களுக்குள், பொதுத் தேர்தலின் போது ஐக்கிய தேசிய கட்சி காணாமல் போனது. அதைபோன்று, மொட்டுக் கட்சிக்கு இவ்வாறான நிலையே ஏற்படும் என கூறினேன். அதுவும் அவ்வாறே நடந்தது. 69 இலட்சம் வாக்குகளைப் பெற்றுக் கொண்ட கட்சி, ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்பாளர் ஒருவரின்றி தடுமாறியது. 

இன்று கட்சி அரசியல் நடைபெறுவதில்லை. ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான ஶ்ரீ கொத்தவில் யானையை அகற்றி சிலிண்டரை வைத்துள்ளனர். இது தாயின் கழுத்தை அறுக்கும் செயலைப் போன்றது. இதனை பார்த்துக் கொண்டிருக்கும் டி.எஸ். சேனாநாயக்க ரணிலுக்கு சாபமளிப்பார்.  

நாட்டிற்கு சேவையாற்றிய யானையை கொன்று விட்டனர். தேர்தல் முடிவுகள் வரும் போது யானைக்கு இறுதிச் சடங்குகளை செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply