
இங்கிலாந்தில் நாளை(21.08) ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
தனஞ்சய டி சில்வா தலைமையிலான இலங்கை அணி, போட்டிக்கு முதல் நாளான இன்று(20.08) ஶ்ரீ லங்கா கிரிக்கெட்டினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேகப்பந்து வீச்சாளரான மிலன் ரத்நாயக்க இலங்கை அணிக்காக தனது முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவுள்ளார்.
இலங்கை அணி: நிசன் மதுஷ்க, திமுத் கருணாரத்ன, குசல் மென்டிஸ், அஞ்சலோ மெத்தியூஸ், தினேஷ் சந்திமல், தனஞ்சய டி சில்வா(அணித் தலைவர்), கமிந்து மென்டிஸ், பிரபாத் ஜயசூரிய, அசித பெர்னாண்டோ, விஷ்வ பெர்னாண்டோ, மிலன் ரத்நாயக்க
இதேவேளை, நாளைய போட்டியில் பங்கேற்கவுள்ள இங்கிலாந்து அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து டெஸ்ட் அணித் தலைவர் பென் ஸ்டோக்ஸ் உபாதை காரணமாக இந்த தொடரிலிருந்து விலகியுள்ள நிலையில், ஒலி போப் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து அணி: பென் டக்கெட், டான் லாரன்ஸ், ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், மேத்யூ பாட்ஸ், மார்க் வூட், சோயிப் பஷீர்
இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி மான்செஸ்டரில் இலங்கை நேரப்படி நாளை(21.08) பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.