மனுஷவின் ஆசனத்திற்கு புதிய உறுப்பினர் நியமனம் 

மனுஷவின் ஆசனத்திற்கு புதிய உறுப்பினர் நியமனம் 

ஐக்கிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட உறுப்பினர் பந்துல லால் பண்டாரிகொட பாராளுமன்ற உறுப்பினராக இன்று(21.08) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். 

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார நீக்கப்பட்டதன் மூலம் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பந்துல லால் பண்டாரிகொட நியமிக்கப்பட்டுள்ளார். 

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார ஐக்கிய மக்கள் சக்தியினால் கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டமை செல்லுபடியாகும் என உயர் நீதிமன்றம் அண்மையில் வழங்கியிருந்த தீர்ப்பினால், அவர் பாராளுமன்ற உறுப்பினராக செயலாற்றும் தகுதியிழந்தார். 

Social Share

Leave a Reply