
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் செய்யப்பட்டுப் பாடல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அந்த பாடல் தற்போது வைரலாகி வருகின்றது.
இந்த பாடலுக்கு தமன் இசையமைத்துள்ளதாகவும், விவேக் பாடல் வரிகளை எழுதியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. .
“தமிழன் கொடி பறக்குது.. தலைவன் யுகம் பிறக்குது.. மூணெழுத்து மந்திரத்தை மீண்டும் ஒலிக்குது” என்ற வரிகள் பாடலில் காணப்படுகின்றது. இது எம்ஜிஆரை குறிப்பதாகத் தெரிகின்றது.
“சிகரம் கிடைச்ச பின்னும் எறங்கி வந்து சேவ செஞ்சு, நீங்க கொடுத்த எல்லாத்துக்கும் நன்றி காட்டும் காலம் இது” என்ற வரிகள் விஜய் திரைத்துறையை விட்டு அரசியலுக்கு வருவதைச் சுட்டிக்காட்டுகின்றன.