
இலங்கை 17 வயதிற்குட்பட்ட கால்பந்தாட்ட அணிக்கு மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையைச் சேர்ந்த 17 வயது மாணவன் கிதுஷன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியிலிருந்து ஏற்கனவே பல மாணவர்கள் இலங்கைத் தேசிய கால்பந்தாட்ட அணிக்குத் தெரிவாகியுள்ளனர்.
கிதுஷன், இந்த பாடசாலையின் 7வது மாணவனாகத் தேசிய அணிக்குத் தெரிவாகியுள்ளார்.
ரோகினிநிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்