அதிக வருமானம் ஈட்டும் ஜனாதிபதி வேட்பாளர் யார் தெரியுமா?

அதிக வருமானம் ஈட்டும் ஜனாதிபதி வேட்பாளர் யார் தெரியுமா?

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் மாதாந்த சம்பளம் குறித்த சொத்துப் பிரகடனங்களின்படி, இலங்கையின் தொழிலதிபர் திலித் ஜயவீர அதிக வருமானம் ஈட்டும் ஜனாதிபதி வேட்பாளராகவும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறைந்த வருமானம் ஈட்டும் வேட்பாளர் எனவும் தெரியவந்துள்ளது.

அவர்களது சொத்துப் பிரகடனங்களின்படி, சர்வஜன அதிகார கட்சியின் தொழிலதிபர் திலித் ஜயவீர 16, 500, 000 ரூபா என்ற மாதாந்த வருமான பட்டியலில் முன்னணியில் உள்ளார். ஜயவீர இலங்கையில் உள்ள ஒரு முக்கிய ஊடக நிறுவனம் உட்பட பல வணிகங்களைச் சொந்தமாக வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

அவரைத் தொடர்ந்து முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மாதாந்த சம்பளம்  1,345,000 ரூபாவாகும்.அவர் வர்த்தக நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜயவீர மற்றும் விஜயதாச ராஜபக்சவைத் தவிர்த்து ஏனைய அனைத்து முக்கிய ஜனாதிபதி வேட்பாளர்களும் மாதாந்த சம்பளமாக 500,000 ரூபாவிற்கும் குறைவாகவே காட்டியுள்ளனர், அவர்களில் பெரும்பாலானோர் அரசாங்க சம்பளத்தை பெறுவோர்.

அவர்களில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச, 454,285 ரூபா மாத வருமானத்துடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

அவரைத் தொடர்ந்து சுயாதீன வேட்பாளராகப் போட்டியிடும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மாதாந்த சம்பளமாக 317,785 ரூபாவும்
 மக்கள் போராட்ட இயக்கத்தின் வேட்பாளர் நுவான் போபகே 300,000 ரூபாவும் காட்டியுள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 295,681 ரூபாவை மாதாந்த வருமானமாகக் காட்டியுள்ளதுடன் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க 256,802 ரூபாவை மாதாந்தச் சம்பளமாகக் காட்டியுள்ளார்.

சொத்துப் பிரகடனங்களின்படி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மிகக் குறைந்த மாத வருமானம்  179,691 ரூபாவைக் கொண்ட ஜனாதிபதி வேட்பாளர் ஆவார்.

Social Share

Leave a Reply