
ஜனாதிபதி வேட்பாளரான விஜயதாச ராஜபக்ஷ கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
கொழும்பு பேராயர் இல்லத்தில் நேற்று(23.08) மாலை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, நாட்டில் அரசியல் ஸ்திரமின்மை, நாடு வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளமை மற்றும் ஜனாதிபதி தேர்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.