இங்கிலாந்துக்கு வெற்றி, இறுதி வரை போராடிய இலங்கை 

இங்கிலாந்துக்கு வெற்றி, இறுதி வரை போராடிய இலங்கை 

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. போட்டியின் நான்காம் நாளான இன்று(24.08) 204 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாடிய இங்கிலாந்து அணி வெற்றி இலக்கைக்கு அண்மித்த போதிலும், இலங்கை அணி கடும் போராட்டம் ஒன்றை வழங்கி இங்கிலாந்து அணிக்கு அழுத்தம் வழங்கியது. இருப்பினும் இங்கிலாந்து அணி 57.2 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து வெற்றியிலக்கை கடந்தது. 

துடுப்பாட்டத்தில் டான் லோரன்ஸ் 34 ஓட்டங்களையும், ஹரி ப்ரூக் 32 ஓட்டங்களையும், ஜோ ரூட் 62 ஓட்டங்களையும், ஜமி ஸ்மித் 39 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் பிரபாத் ஜயசூர்ய, அசித்த பெர்னாண்டோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், மிலான் ரத்நாயக்க ஒரு விக்கெட்டினையும் கைபபற்றினர்.    

இதன்படி, 5 விக்கெட்டுக்களினால் வெற்றியீட்டிய இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற ரீதியில் முன்னிலையிலுள்ளது. தொடரின் இரண்டாவது போட்டி எதிர்வரும் 29ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை அணியின் இரண்டாவது இன்னிங்ஸ்

இலங்கை அணியின் இரண்டாம் இன்னிங்சிஸ் சகல விக்கெட்களையும் இழந்து 326 ஓட்டங்களை பெற்றது. இதன் மூலம் 204 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கு  நிர்ணயிக்கப்பட்து.  

இலங்கை அணியின் இரண்டாவது இன்னிங்சிஸ் துடுப்பாட்டத்தில் கமிந்து மிக அபாரமாக துடுப்பாடி சதத்தை பூர்த்தி செய்தி இலங்கை அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றார். நான்காவது போட்டியில் தனது மூன்றாவது சதத்தை பூர்த்தி செய்துள்ளார். இதுவரை 7 இன்னிங்சில் 553 ஓட்டங்களை பூர்த்தி செய்துள்ளார்.   இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் நிசன் மதுஷ்க, குசல் மென்டிஸ் ஆகியோர் ஓட்டங்கள் எதனையும் பெறாமல் ஆரம்பத்தில் ஆட்டமிழந்தனர்.  திமுத் கருணாரத்ன 27 ஓட்டங்களுக்கும், தனஞ்சய டி சில்வா 11 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழந்தனர். தனது 42வது டெஸ்ட் அரை சதத்தை பூர்த்தி செய்த அஞ்சலோ மெத்தியூஸ் 65 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். காயம் காரணமாக துடுப்பாட்டத்தில் நடுவில் வைத்தியசாலை சென்று மீண்டும் துடுப்பாட வந்த டினேஷ் சந்திமால் 79 ஓட்டங்களை பெற்றார். இவரும், கமிந்து மென்டிசும் ஏழாவது விக்கெட் இணைப்பாட்டமாக 117 ஓட்டங்களை பகிர்ந்தனர். மிலன் ரத்நாயக்க 10 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

தினேஷ் சந்திமல் 10 ஓட்டங்களை பெற்றிருந்த போது, பந்து கையில் பட்டதால் ஏற்பட்ட வலியின் காரணமாக களத்திலிருந்து வெளியேறினார். இருப்பினும் பரிசோதனைகளில் அவருக்கு உபாதை எதுவும் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டதுடன், தொடர்ந்து போட்டியில் பங்கேற்க முடியும் என அறிவிக்கப்பட்டது. தினேஷ் சந்திமல் 6வது விக்கெட்டின் பின்னர் மீண்டும் களத்திற்கு வந்தார்.

இங்கிலாந்து அணி சார்பில் பந்துவீச்சில் க்றிஸ் வோக்ஸ், மத்தியூ பொட்ஸ் ஆகியோர் தலா  3 விக்கெட்டுக்களையும், கஸ் அட்கின்சன் 2 விக்கெட்களையும், மார்க் வூட், ஜோ ரூட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

போட்டியின் முதலாவது இன்னிங்ஸ் விபரம்,

முதல் இன்னிங்சில் துடுப்பாடிய இலங்கை அணி 74 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 236 ஓட்டங்களை பெற்றது. இதில் தனஞ்ஜய டி சில்வா 74 ஓட்டங்களையும், தனது அறிமுக்கத்தை மேற்கொண்ட மிலான் ரத்நாயக்க 72 ஓட்டங்களை பெற்று அவரது முதலாவது அரைச்சதத்தை பூர்த்தி செய்துள்ளார். 8 ஆவது விக்கெட் இணைப்பாட்டத்திற்காக ஜோடி சேர்ந்த தனஞ்சய டி சில்வா மற்றும் மிலான் ரத்நாயக்க ஆகியோர் 63 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து இலங்கை அணியை மீட்டெடுத்தனர். தனஞ்சய டி சில்வா ஆட்டமிழந்ததுடன் 9 ஆவது விக்கெட்டிற்காக ஜோடி சேர்ந்த மிலான் ரத்நாயக்க மற்றும் விஷ்வ பெர்னாண்டோ ஆகியோர் 50 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்தனர்.

ஆரம்பம் சரியாக அமையாத காரணத்தினாலேயே இலங்கை அணி தடுமாற வேண்டிய நிலை ஏற்பட்டது. நிஷான் மதுஷ்க 4 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 2 ஓட்டங்களையும் பெற்றனர். அஞ்சலோ மத்தியூஸ் ஓட்டங்களை எதுவும் பெறாமல் ஆட்டமிழந்தார். குசல் மென்டிஸ் 24 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமால் 17 ஓட்டங்களையும், கமிந்து மென்டிஸ் 12 ஓட்டங்களையும், பிரபாத் ஜயசூரிய 10 ஓட்டங்களையும், விஷ்வ பெர்னாண்டோ 13 ஓட்டங்களையும் பெற்றனர்.

இங்கிலாந்து அணிக்காக பந்துவீச்சில் க்றிஸ் வோக்ஸ், ஷொயீப் பஷீர் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், கஸ் அட்கின்சன் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.  

முதலாவது இன்னிங்சில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி 85.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 358 ஓட்டங்களை பெற்றது. இதில் ஜேமி ஸ்மித் 111 ஓட்டங்களையும், ஹரி ப்ரூக் 56 ஓட்டங்களையும், ஜோ ரூட் 42 ஓட்டங்களையும், டான் லோரன்ஸ் 30 ஓட்டங்களையும், க்றிஸ் வோக்ஸ் 25 ஓட்டங்களையும், மார்க் வூட் 23 ஓட்டங்களையும், கஸ் அட்கின்சன் 20 ஓட்டங்களையும் பெற்றனர். ஜேமி ஸ்மித் அவரது 4 ஆவது போட்டியில் தனது கன்னிச் சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.

இலங்கை அணிக்காக பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ 4 விக்கெட்களையும், பிரபாத் ஜயசூரிய 3 விக்கெட்களையும், விஷ்வ பெர்னாண்டோ 2 விக்கெட்களையும், மிலான் ரத்நாயக்க 1 விக்கெட்டினையும் கைப்பற்றியுள்ளனர். மிலான் ரத்நாயக்க கஸ் அட்கின்சனின் விக்கெட்டினைக் கைப்பற்றி அவரது முதலாவது டெஸ்ட் விக்கெட்டினை கைப்பற்றி கொண்டார்.

கடந்த 21 ஆம் திகதி  இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்திலுள்ள மஞ்செஸ்டர் ஓல்ட் டிரபோர்ட் மைதானத்தில் ஆரம்பித்து நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

அணி விபரம்

இலங்கை அணி – தனஞ்சய டி சில்வா(அணித் தலைவர்), திமுத் கருணாரத்ன, நிசன் மதுஷ்க, குசல் மென்டிஸ், அஞ்சலோ மெத்தியூஸ், தினேஷ் சந்திமல், கமிந்து மென்டிஸ், அசித்த பெர்னாண்டோ, விஷ்வ பெர்னாண்டோ, மிலன் ரத்நாயக்க, பிரபாத் ஜயசூரிய

இங்கிலாந்து அணி – ஒலி பொப்(அணித் தலைவர்), ஹரி ப்ரூக், பென் டக்கெட், டான் லோரன்ஸ், ஜோ ரூட், ஜமி ஸ்மித், க்றிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், மத்தியூ பொட்ஸ், ஷொயீப் பஷீர், மார்க் வூட்

Social Share

Leave a Reply