‘ஒரு மில்லியன்’ மனு சேகரிப்பு நிகழ்வு

ரஞ்சன் ராமநாயக்க சார்பில் ‘சுதந்திரப் போராட்டம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரும் வகையில், ‘ஒரு மில்லியன்’ மனு சேகரிப்பு நிகழ்வு நேற்று (30/11) இடம்பெற்றது.

நிட்டம்புவ பஸ் நிலையத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தலைமையில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்ய கோரியே இந்த ‘ஒரு மில்லியன்’ மனு சேகரிப்பு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

குறித்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 4 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

‘ஒரு மில்லியன்’ மனு சேகரிப்பு நிகழ்வு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version