
இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் ஏகன், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகவுள்ள ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’ திரைப்படம் அமெரிக்காவில் நடைபெறும் 22வது ஆக்லாந்து சர்வதேச திரைப்பட விழாவில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 18ஆம் திகதி திரையிடப்பட உள்ளது.
இத்திரைப்பட விழாவில் திரையிடுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழ் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’ திரைப்படம்.
D.அருளானந்து மற்றும் மெத்திவ் அருளானந்து ஆகியோரின் இணை தயாரிப்பில் N.R. ரகுநாதன் இசையமைத்திருக்கும் இத்திரைப்படம் செப்டெம்பர் 20ஆம் திகதி திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளது.