இயலும் ஸ்ரீ லங்கா – யாழ் மாவட்ட தேர்தல் செயற்பாட்டு அலுவலகம் திறந்து வைப்பு

இயலும் ஸ்ரீ லங்கா - யாழ் மாவட்ட தேர்தல் செயற்பாட்டு அலுவலகம் திறந்து வைப்பு

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின் இயலும் ஸ்ரீ லங்காவின் யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் செயற்பாட்டு அலுவலகம் இன்று (31.08) காலை திறந்து வைக்கப்பட்டது

யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

யாழ்ப்பாண காங்கேசன்துறை வீதி தாவடியில் இந்த அலுவலகம் செயற்படவுள்ளது.

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் 11 தேர்தல் தொகுதிகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் நடவடிக்கைகளை இந்த அலுவலகம் மேற்கொள்ளவுள்ளது.

இந்த நிகழ்வில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன இராமநாதனின் தொகுதி அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள், முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.

Social Share

Leave a Reply