
அரசியல்வாதிகளின் கொள்கைகளுக்காக மக்கள் அவர்களை தேர்வு செய்கிறார்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவு திரட்டும் பொதுக்கூட்டம் நேற்றிரவு (02.09) காலி – ஹபராதுவ பண்டாரநாயக்க மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த நாமல்,
‘மக்களால்தான் அரசியல்வாதிகள் செயற்பட முடிகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அரசியல்வாதிகளின் கொள்கைகளுக்காக மக்கள் அவர்களை தேர்வு செய்கிறார்கள். எனவே, அந்த மரியாதையை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு அரசியல்வாதிகளுக்கு உள்ளது.
எதிரெதிர் தளங்களின் நற்பெயரை சேதப்படுத்துவதன் மூலம் நாட்டின் சவால்களை எதிர்கொள்ள முடியாது” என அவர் மேலும் தெரிவித்தார்.