சென்னை – யாழ்ப்பாணம் விமானச் சேவையை ஆரம்பித்த இண்டிகோ

சென்னை - யாழ்ப்பாணம் விமானச் சேவையை ஆரம்பித்த இண்டிகோ

இந்தியாவின் முக்கிய விமான நிறுவனமான இண்டிகோ, சென்னை – யாழ்ப்பாணம் இடையேயான விமானச் சேவைகளை நேற்று(01.09) ஆரம்பித்தது.

சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த முதலாவது இண்டிகோ விமானம் நேற்று(01.09) பிற்பகல் 3.05 மணிக்கு 52 பயணிகளுடன் யாழ்ப்பாண விமான நிலையத்தை வந்தடைந்ததுடன், 72 பயணிகளுடன் மீண்டும் சென்னை நோக்கிப் புறப்பட்டது.

சென்னை – யாழ்ப்பாணம் இடையே தினமும் விமானங்களை இயக்கவுள்ளதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த விமானச் சேவைகளுக்கான பயணச் சீட்டுக்களை இண்டிகோ நிறுவனத்தின் உத்தியோகபூர்வ www.goIndiGo.in இணையத்தளத்தினுடாகவும், கைத்தொலைபேசி செயலியினுடாகவும் பெற்றுக்கொள்ள முடியும்.  

Social Share

Leave a Reply