3 மில்லியன் சிகரெட்டுக்களை அழிக்க நடவடிக்கை

3 மில்லியன் சிகரெட்டுக்களை அழிக்க நடவடிக்கை

நாட்டிற்குள் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட சுமார் 75 மில்லியன் ரூபா மதிப்புள்ள 3 மில்லியன் சிகரெட்டுக்களை அழிப்பதற்காக இலங்கை புகையிலை கம்பனியிடம் ஒப்படைத்துள்ளதாகச் சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் முதல் 6 மாத காலத்தில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவருவதற்கு முயற்சிக்கப்பட்ட சிகரெட் தொகையே இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகளினூடாக சுமார் 480 மில்லியன் ரூபா வரி ஏய்ப்பு செய்வதற்கு முயற்சிக்க பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.  

ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார், இந்தியா, கம்போடியா மற்றும் சீனா ஆகிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு விமானம் மூலம் வரும் பயணிகளிடமிருந்தே பெருமளவான சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply