விவசாயிகளினால் விவசாய செயற்பாடுகளுக்காக வாங்கிய அனைத்து பயிர்ச்செய்கை கடனையும் உடனடியாக தள்ளுபடி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பல விவசாயச் சங்கங்கள் விடுத்த கோரிக்கைகளை ஏற்று விவசாயிகளுக்கு நிவாரணம் மற்றும் ஆதரவு வழங்கும் வகையில் அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.