தமிழ் மக்கள் ஏமாறுவதற்குத் தாயாரில்லை – சங்கு சின்னத்திற்கு வாக்களிக்கக் கோரும் அரியநேந்திரன்

தமிழ் மக்கள் ஏமாறுவதற்குத் தாயாரில்லை - சங்கு சின்னத்திற்கு வாக்களிக்கக் கோரும் அரியநேந்திரன்

இணைந்த வடகிழக்கிலே இருக்கின்ற மக்கள், வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் பெருமளவிலான வாக்கினைத் தமிழ்ப்பொது வேட்பாளரான தனக்கு அளிப்பதன்  மூலம் தமிழ் மக்கள் இனியும் ஏமாறப் போவதில்லை என்பதை அரசாங்கத்திற்கு எடுத்துக் காட்ட முடியும் என ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ்ப்பொது வேட்பாளர் பா. அரியநேந்திரன் தெரிவித்தார்.

மன்னார் ரெலோ அலுவலகத்தில் கடந்த 04ம் திகதி இடம் பெற்ற மக்கள் சந்திப்பைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாங்கள் உரிமைக்காகப் போராடிய ஒரு இனம்.தொடர்ச்சியாகச் சுதந்திரத்தை இழந்தவர்களாக இருக்கிறோம். மக்களின் நிலங்களை வளங்களைச் சிதைப்பதுவும் இனப்படுகொலைக்குச் சமனானதே. இன்று வடகிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் இந்த அநீதி நடந்து வருகிறது. 

தமிழன் தமிழனாக இருக்க வேண்டும். தமிழ் மக்கள் வடக்கு கிழக்கில் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும். ஒரு அடையாளத்திற்காகவே நான் சங்குச் சின்னத்தில் போட்டியிடுகின்றேன். எனவே நீங்கள் சங்குச் சின்னத்துக்கு வழங்கும் வாக்கு உங்களுக்கானது. 

சிதறிக் கிடக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒன்றிணைத்து  ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் ஒரு நோக்காக  இதனை அனைவரும் பார்க்க வேண்டும்.

யாரோ ஒருவர் ஜனாதிபதியாக வெற்றி பெறுவார்.யாராகவும் இருக்கலாம்.இந்த நாட்டின் 9 ஆவது ஜனாதிபதியாக வருகிறவருக்கு ஒரு பாடமாக இது அமைய வேண்டும்.எங்களைத் தலைவர்கள் ஏமாற்றி இருந்தாலும் மக்களாகிய நாங்கள் தயார் இல்லை என்பதைக் காட்ட வேண்டும்.

எங்களுடன் 7 தமிழ் கட்சிகள் இணைந்துள்ளது.எனினும் இலங்கை தமிழரசு கட்சி அதில் இணையவில்லை.இலங்கை தமிழரசுக் கட்சியில் இருக்கும் ஒரு சிலர் தமிழ்ப்  பொது வேட்பாளரை ஆதரிக்கக் கூடாது என்கிற முடிவை எடுத்துள்ளார்கள்.அது அவர்களின் உரிமையெனத் தெரிவித்தார்.

இதேவேளைத் தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் மாவட்ட அமைப்பாளரும்,பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் செயலாளருமான டானியல் வசந்தன்  கருத்துத் தெரிவிக்கும் போது பொதுக்கட்டமைப்பினால் நியமிக்கப்பட்டிருக்கும் இந்த தமிழ்ப் பொது வேட்பாளருக்குத் தமிழீழ விடுதலை இயக்கம் ஆதரவு தெரிவித்து இந்த தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்தார்.

ரோகினி நிஷாந்தன் – மன்னார் செய்தியாளர்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version