பச்சை,சிவப்பு நிற யானை குட்டிகள் இணைந்து கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது – சஜித்

பச்சை,சிவப்பு நிற யானை குட்டிகள் இணைந்து கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது - சஜித்

பச்சை நிற யானை குட்டியும், சிவப்பு நிற யானை குட்டியும் ஒன்றாக சேர்ந்து ரணில் அநுர கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு விட்டது. அதனால் உங்களுடைய பெருமதியான வாக்கை திருடர்களை பாதுகாக்கும் கூட்டமைப்புக்கு வழங்கி வீணாக்க வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த 34 ஆவது மக்கள் வெற்றி பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் மினுவாங்கொடையில் நேற்று(05.09) மாலை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

இங்கு கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாகுவார் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்து அமைகின்றது. பச்சை யானை குட்டிகளும், சிவப்பு யானை குட்டிகளும் இன்று ஒன்றாக சேர்ந்து இருக்கின்றது. இதனூடாக ரணில் விக்கிரமசிங்கவுக்கு வெற்றி பெற முடியாது என்பது வெளிப்படையாகியுள்ளது. எனவே உங்கள் வாக்குகளை வீணடிக்காமல் நாட்டை கட்டி எழுப்புவதற்காக ஐக்கிய மக்கள் சக்திக்கும், ஐக்கிய மக்கள் கூட்டமைப்புக்கும் வாக்களிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி காரர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்.

எவரேனும் ஒருவர் மக்கள் விடுதலை முன்னணிகோ, அநுரகுமார திசாநாயக்காவிற்கோ வாக்களிப்பார்கள் என்றால், அது திருடர்களை பாதுகாக்கின்ற ஜனாதிபதியுடன் ஒன்றாக இணைந்து செயற்படுகின்ற குழுவிற்கு வழங்குகின்ற வாக்காகும். அரச ஊடகங்களில் அநுர குமார திசாநாயக்கவுக்கு வழங்கப்படுகின்ற அதிக சந்தர்ப்பத்தின் ஊடாக ரணில் அநுர ஒப்பந்தம் இன்று உண்மைப்படுத்தப்பட்டு இருக்கின்றது.

🟩 மக்கள் முன்னேற்றம் அடைவதில் ரணிலுக்கும் அனுரவுக்கும் விருப்பமில்லை.

ஐக்கிய மக்கள் சக்தி இந்த நாட்டை கட்டியெழுப்பி முன்னேற்றம் அடையச் செய்யும், இந்த நாட்டில் வீடுகளை அமைக்கும் என்று கூறி, இந்த நாட்டில் உற்பத்தி தொழிற்சாலைகளை உருவாக்கும் என்று கூறி அச்சத்தில் இருக்கின்றார்கள். 10,096 பாடசாலைகளையும் சகல வசதிகளையும் கொண்ட பாடசாலைகளாக மாற்றும் என்று பயந்திருக்கின்றார்கள். 220 இலட்சம் பேரும் ஆட்சியாளர்களாக மாறும் யுகம் உருவாவதற்கு ரணிலும் அநுரவும் அச்சமடைந்திருக்கின்றார்கள். அதனால் ரணில் அநுர ஒப்பந்தம் மிகவும் தெளிவாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இந்த நாட்டில் உள்ள 220 இலட்சம் மக்களும் முட்டாள்கள் என அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எனவே இந்த தந்திரமான அரசியல் சூழ்ச்சிக்குள் சிக்கிக் கொள்ளாமல், இந்த நாட்டை கட்டி எழுப்பக்கூடிய வகையில் மக்கள் வரத்தை பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுக்கிறேன்.

🟩 நாம் சேவை செய்யும்போது ரணிலும் அநுரவும் தொடர்ந்தும் கேளிக்கை செய்தார்கள்.

வங்குரோத்தடைந்த நாட்டைக் கட்டி எழுப்புவதற்கு பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கான நிதி திரட்டப்பட வேண்டும். 76 வருட வரலாற்றை மாற்றிய ஐக்கிய மக்கள் சக்தி ஆயிரம் மில்லியன் பெறுமதியான சேவைகளை நாட்டுக்காக செய்திருக்கின்றது. கல்வித் துறையையும் சுகாதாரத் துறையும் மேம்படுத்துவதற்காக சேவைகளை செய்திருக்கின்றது என எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய மக்கள் சக்தி நாட்டுக்காக சேவை செய்தபோது அநுரவும் ரணிலும் அச்சமடைந்தார்கள். நாம் சேவை செய்யும்போது அவர்கள் அதனை பரிகாசித்தார்கள். இந்த பரிகாசங்கள் காரணமாக இன்று நாடு வங்கரோத்தடைந்திருக்கிறது. எனவே இந்த அரசாங்கமும் மக்கள் விடுதலை முன்னணியும் சொல்கின்ற பொய்களை நம்பி ஏமாற வேண்டாம். ரணிலுக்கும் அனுரவுக்கும் நினைக்க முடியாத அளவு நிவாரணத் தொகையை இந்த நாட்டுக்கு கொண்டு வருவதற்கு நான் நடவடிக்கை எடுப்பேன். அவை கடன் அல்ல அது நிவாரணமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது குறிப்பிட்டார்.

அத்தோடு நீண்ட கால வறுமையில் இருந்து மீண்டு எழுவதற்கும், தங்கி வாழ்கின்ற கலாச்சாரத்திலிருந்து மீண்டு எழுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். வீழ்ந்து இருக்கின்ற பாதாளத்திலிருந்து மீட்டெடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் துறையும் இன்று வீழ்ச்சி அடைந்திருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில், அந்த தொழிற்துறையாளர்களுக்கு சக்தியை கொடுக்க வேண்டி இருக்கின்றது. அத்தோடு புதிய தொழில் முனைவர்கள் ஒரு மில்லியனை உருவாக்குவோம். அதில் இளைஞர்களுக்கு அதிக சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

🟩 நாட்டைக் கட்டியெழுப்ப 2048 வரை காத்திருக்க வேண்டியதில்லை.

ஐக்கிய மக்கள் சக்திக்கு மீண்டும் வீடமைப்பு திட்டத்தை ஆரம்பிப்பதற்கு அரசாங்கத்தின் நிதி தேவை இல்லை. இந்த வீடமைப்பு திட்டத்திற்கு நிவாரணங்களை வழங்குவதற்கு செல்வந்தர்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்கு வளமான நாடு ஒன்று தேவை. அவ்வாறான நாடொன்று இருக்கின்ற போது வேண்டிய அளவு வளங்களை தமக்கு பெற்றுக் கொள்ள முடியும். இல்லை, முடியாது, பார்ப்போம், என்ற வார்த்தைகள் என்னிடம் இல்லை. அதனால் 2048 ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டிய தேவையில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கே சுட்டிக்காட்டினார்.

🟩 ரணிலுக்கும் அநுரவுக்கும் புள்ளடியிட்டு வாக்கை வீணடிக்க வேண்டாம்.

ரணில் அநுர கூட்டமைப்புக்கு புள்ளடியிட்டு வாக்கை வீணடிக்க வேண்டாம் என்றும் ரணில் அனுர கூட்டமைப்பு தற்பொழுது பிரபல்யமடைந்திருக்கின்றமையால், 220 இலட்சம் மக்களை வெற்றி பெறச் செய்வதற்காக, ஐக்கிய மக்கள் சக்தியை வெற்றி பெறச் செய்யுமாறு கோரிக்கை விடுக்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version