ஜனாதிபதிக்கு ஆதரவாக யாழில் பிரச்சாரம்

ஜனாதிபதிக்கு ஆதரவாக யாழில் பிரச்சாரம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில்
அமைச்சர்கள் இன்றையதினம் (07.09) தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த உள்ளிட்டோர் பிரச்சார நடவடிக்கையை மேற்கொண்டனர்.

நல்லூர் சங்கிலியன் தோப்பு மற்றும் உடுப்பட்டி கொலின்ஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ள பிரசார
கூட்டங்களில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று யாழ்ப்பாணத்திற்கு செல்கிறார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் திருநெல்வேலிசந்தைப் பகுதியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரனாலும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

திருநெல்வேலி சந்தை பகுதியிலுள்ள மக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு இன்று காலை துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

Social Share

Leave a Reply