தலைமன்னார் செல்வேரி குடிநீர் திட்டம் ஆரம்பம்

மன்னார், தலைமன்னார் பிரதான வீதி, செல்வேரி கிராம மக்களின் குடிநீர்த்  தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில்  அமைக்கப்பட்ட ‘செல்வேரி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம்’ நேற்று(07.09) மாலை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மன்னார் செல்வேரி பகுதியில் உள்ள பொதுமக்கள் நீண்ட காலமாகக் குடிநீர் பெறுவதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்த நிலையில், குடிநீர் வேண்டிக் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அவர்களின் கோரிக்கைக்கு அமைவாகத் தள்ளாடி 54 ஆவது  பிரிவு படையினரின் ஏற்பாட்டில் குறித்த கிராம மக்கள் குடிநீர் பெறும் வகையில், இந்தக்  குடிநீர்த் திட்டமானது அமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்கு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் இராணுவத்தின் வன்னி பிராந்திய  கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் J.P.C.பீரிஸ், மற்றும் 54 காலாட்படை பிரிவின் பொறுப்பதிகாரி மேஜர் ஜெனரல் R.P.A.R.P  ராஜபக்க்ஷ, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்  மற்றும் சங்கைக்குரிய தேரர்கள் கலந்து கொண்டு குறித்த குடிநீர் திட்டத்தை திறந்து வைத்தனர்.

ரோகினி நிஷாந்தன் – மன்னார் செய்தியாளர்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version