செயற்கையாக உருவாக்கப்பட்ட அரசியல் பேரணிகளை நம்ப வேண்டாம் – திலித்

செயற்கையாக உருவாக்கப்பட்ட அரசியல் பேரணிகளை நம்ப வேண்டாம் - திலித்

செயற்கையாக உருவாக்கப்பட்ட அரசியல் பேரணிகளைப் பார்த்து இறுதித் தீர்மானம் எடுக்க வேண்டாம் என சர்ஜவஜன அதிகார கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

சர்வஜன அதிகார அமைப்பின் பல ஆசன அமைப்பாளர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கி வைத்து நேற்று காலை உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் வேளையில் இலங்கை ஜனாதிபதித் தேர்தல் இறுதிக் கட்டத்திற்கு வந்துள்ளது.தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்ததைப் போன்று செலவினங்களை கட்டுப்படுத்தி இயன்றளவு பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

எனவே, நாங்கள் மக்களை ஈர்ப்பதற்காக பேருந்தில் மக்களை ஏற்றிசெல்லவோ, ட்ரோன் கேமராக்களை பயன்படுத்தவோ இல்லை.

கூட்டங்களுக்கு வரும் அனைவருமே அந்த வேட்பாளருக்குதான் வாக்களிப்பார்கள் என்று யாராவது நினைப்பார்களாயின் அது முற்றிலும் தவறு. இவ்வாறான கூட்டங்களில் பங்கேற்பதற்காகவே மக்கள் குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள்தான் நாடு முழுவதும் செல்கின்றனர்.

எனவேதான் நான் கூறுகிறேன் இந்த கூட்டத்தை வைத்து மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்காதீர்கள். இறுதி ஆய்வு அறிக்கைகள் பெறப்பட்டு வருகின்றன. மக்கள் வாக்குப் பெட்டிக்கு அருகே சென்று தங்களது மனசாட்சிக்கு ஏற்ப புத்திசாலித்தனமான முடிவை மேற்கொள்ள வேண்டும்” என மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply