
கண்டி பெண்கள் உயர்நிலைக் கல்லூரி மாணவிகள், ஜனாதிபதியை சந்தித்தனர்
கண்டி பெண்கள் உயர்நிலைக் கல்லூரியின் சுமார் 371 மாணவிகள் நேற்று (11.09) களப்பயணம் மேற்கொண்டு, ஜனாதிபதி மாளிகைக்கு விஜயம் செய்தனர்.
ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்தபோது ரணில் விக்ரமசிங்கவைச் சந்திக்கும் சந்தர்ப்பமும் கிடைத்தது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவிற்கமைய, ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, துறைமுக நகரம், மத்திய வங்கி, பாராளுமன்றம் உள்ளிட்ட கொழும்பை சுற்றியுள்ள கல்வி முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பார்வையிடும் வாய்ப்பு பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தற்போதைய பரபரப்பான சூழ்நிலையிலும் மாணவிகளுடன் சிநேகபூர்வமாக உரையாடிய ஜனாதிபதி, கல்விச் செயற்பாடுகள், மாணவர் பாராளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் ஏனைய இணைச் செயற்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.
அதன் பின்னர் ஜனாதிபதி, பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.