நாட்டைக் கட்டியெழுப்புவதில் பெண்கள் பலமான சக்தி என சர்வஜன அதிகாரம் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் மாவட்ட மகளிர் தொழில் முயற்சியாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம் அனுராதபுரத்தில் நேற்று (13.09) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொணடு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
பெண்களை ஊக்குவிக்காமல் சமூக மாற்றத்தை உருவாக்க முடியாது. கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்திற்கு தேவையான உதவிகளை வழங்கத் தயாராக உள்ளோம்.
இன்று பெண்கள் பல இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.வருமான ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதற்கான மூலோபாய வேலைத்திட்டத்தின் கீழ் பெண்களை பலப்படுத்துவோம்.
தற்போது வழங்கப்பட்டு வரும் போலியான மானிய முறைக்குப் பதிலாக மனதில் தைரியம் என்ற மூலோபாய பிரேரணையின் ஊடாக ஒவ்வொரு குடும்பத்தின் குறைந்தபட்ச வருமானத்தை 100,000 ரூபாவாக அதிகரிப்பதற்கான வேலைத்திட்டத்தை முன்வைத்துள்ளோம்.
மேலும் வளர்ச்சிக்கு தேவையான மூலதனம், அறிவு மற்றும் திறன்களை வழங்க, தேவையேற்படின் மானியமாக 40,000 ரூபா வழங்கப்படும்.
இதேவேளை, நுண்நிதி கடன் வலையில் வீழ்ந்துள்ள இலங்கைப் பெண்களை அதிலிருந்து விடுவிப்பதற்காக கடனுக்கான வட்டி உடனடியாக நீக்கப்படும்” என்றார்.