தாம் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க தயாராகுவதாக அரச ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அரச தொழிற்சங்க சம்மேளனம் இதனை தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நிறைவேறுவதற்கு முன்னர் அரச ஊழியர்களுக்கு குறைந்தது 10,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்று அரச தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.
குறித்த கொடுப்பனவை வழங்கத் தவறினால், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம் என அச்சம்மேளனம் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.