டொனால் ட்ரம்ப் மீது மீண்டும் துப்பாக்கிச் சூடு முயற்சி

டொனால் ட்ரம்ப் மீது மீண்டும் துப்பாக்கிச் சூடு முயற்சி

அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக களமிறங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் மீது மீண்டும் துப்பாக்கி சூடு நடத்த முயற்சிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்கா, புளோரிடா கோல்ப் கிளப்பில் ட்ரம்ப் விளையாட சென்ற போது இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. 

இதையடுத்து, அதிகாரிகள் ட்ரம்பை அங்கிருந்து பாதுகாப்பாக அனுப்பி வைத்துள்ளனர்.

துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி வேட்பாளர் ட்ரம்ப் பாதுகாப்பாக உள்ளார் என அவரது கட்சி X தளத்தில் பதிவிட்டுள்ளது.

அண்மையில், பென்சில்வேனியாவில் நடந்த பிரசாரத்திலும் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டவை சுட்டிக்காட்டுத்தக்கது.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version