குற்றப் பத்திரிகை வாசிப்பு

கடந்த 2016ஆம் ஆண்டு இராஜகிரியவில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கக்கும் வழக்கில் சம்பந்தப்பட்ட ஏனைய இருவருக்கும் எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டது.

வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராஜகிரிய பகுதியில், கடந்த 2016 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க பயணித்த வாகனம் விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்த விவகாரத்தில், சம்பிக்க ரணவக்க, அவரது சாரதி மற்றும் வெலிக்கடை பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி ஆகிய மூவருக்கும் எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் கடந்த 30ஆம் திகதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த பத்திரிகை இன்று (02/12) வாசிப்பிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

குற்றப் பத்திரிகை வாசிப்பு

Social Share

Leave a Reply